Saturday 15 October 2011

சும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய முதல் கவிதை)


     
ஆகிவிட்டன ஆண்டுகள் பதினான்கு - ஆயினும்
நான் இருக்கிறேன் உன் நினைவோடு

மழிக்க மழிக்க மீண்டும் முளைக்கும் தாடிபோல்
மறக்க மறக்க உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

சூனியமாகிப் போன என் நினைவுகளில் - நீ
உதிர்த்துவிட்டுப் போன புன்னகை மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது

விடியாத என் பொழுதுகளோ, கனவுகளில்
உன்னோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன.

திருந்தாத என் மனமோ
உனக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது

உருப்படாத என் கைகளோ
உன்னைப்பற்றித் தினமும் எழுதிக் கொண்டிருக்கின்றது

உனக்கு மறந்திருக்கும்,
உன்னோடு நான் இருந்த பொழுதொன்றில்
விளையாட்டாய்க் கேட்டாய் - உன்னை
மறந்து நான் போனால் என் செய்வாய் என்று

வாடிய என் முகம் பார்த்து
குறும்பாகக் கண்சிமிட்டிக் கொண்டே
ச்சும்மா சும்மா என்றாய்
உனக்குத் தெரியுமா, இந்த உலகிலே
நானே இன்று
சும்மா சும்மா தான் என்று


லண்டன் தமிழ் வானொலியை நேரலையில் பார்க்கவும் கேட்கவும்
          
     

2 comments:

Yaathoramani.blogspot.com said...

படித்து வெகு நேரம் ஆகியும்
கவிதை சும்மா இல்லை
என்னுள் என்னை என்னவோ
செய்து கொண்டு உள்ளது
அதுதானே படைப்பின் சிறப்பு
அருமையான படைப்பு
தொடர் வாழ்த்துக்கள் த.ம 1

sathees said...

உங்கள் வாழ்த்துக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

Post a Comment