Thursday 18 September 2014

ஏய் எருமை மாடு.......




அன்பே நீ எருமை மாடு
மேலே மழை பெய்தது போலே
போனால் போனால் ஆகுமா
நீ வெறுத்தால் என் காதல்
பொய்த்துப் போகுமா

உன் மேலே நான் வைத்த ஆசை - அது
நீ போன கோவிலின் மணி ஓசை
உன் செவிதனை சேராமல் போய்விடுமா
என் மனம்தனை ஆறாமல் செய்திடுமா

நானும் தான் கடவுளை தேடினேன்
என் காதல் மெய்ப்பட வேண்டினேன்
நான் என்ன நயன் தாராவையா கேட்டேன்
நாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்

என்னை ஏன் அவன் தண்டித்தான்
உனைச் சேராமல் செய்வித்தான்
காதலை நான் வெறுக்கவா - இல்லை
கடவுளே இல்லையென்று நான் மறுக்கவா

நான் இன்னும் நானாகவே இருக்கவா
இல்லை எதிர் காலத்திலே
எனை நீ வெறுத்ததற்காய்
உனை வருந்திடச் செய்திடவா?????


4 comments:

மகேந்திரன் said...

முதலில் தலைப்பை பார்த்து பயந்தே போனேன்...
வந்து படித்தபின்னர்.. அப்பாட என்று இருந்தது...
நல்ல ஆக்கம் நண்பரே...

kowsy said...

"நானும் தான் கடவுளை தேடினேன்
என் காதல் மெய்ப்பட வேண்டினேன்
நான் என்ன நயன் தாராவையா கேட்டேன்
நாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்''

எது எது எப்படி எப்படி நடக்குமோ அது அது அப்படியே நடக்கும். கவிதைக்குக் கருவென்ன பஞ்சமா? காதலின் வலியென்ன கொஞ்சமா? எழுதி எழுதித் தீர்க்கவே கைவிரல் வலிக்குமா? தொடரவே நாட்கள் என்ன கொஞ்சமா? வாழ்த்துக்கள் சதீஷ். என்றும் உன்னோடு உன் வளர்ச்சியில் நான் இருப்பேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

visit : http://www.gowsy.com/2014/09/versatile-blogger-award.html

sathees said...

உங்கள் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல கோடி.

Post a Comment